‘சவால்களைச் சிறப்பாக கையாளும் விமானத் துறை’

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் நேற்று காலையிலிருந்து இரண்டு வாரங் களுக்குப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப் பட்டுள்ளது. காலை 9 மணிக்குத் திறக்கப்பட்ட முனையத்திற்கு முதல் ஒரு மணி நேரத்தில் 1,200 பேர் வருகையளித்தனர். நான்காவது முனையத்திற்கு வருகையளித்த உள்கட்டமைப் புக்கான ஒருங்கிணைப்பு அமைச் சரும் போக்குவரத்து அமைச்ச ருமான கோ பூன் வான், விமான போக்குவரத்து சிங்கப்பூருக்கு முக்கியமான ஒரு துறை என்றும் உலகளாவிய நிலையில் அதில் நாம் போட்டியிட முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

அத்துறையில் வளர்ச்சி மிகவும் வலுவாக உள்ளதை சுட்டிய அவர், நாம் எதிர்நோக்கும் சவால்களைக் குறைவாக எடைப்போடக்கூடாது என்றும் கூறினார். சில நேரங்களில் தவறுகள் ஏற்படுவது உண்டு, உள்கட்ட மைப்பு தேவைக்குக் குறைவாக இருப்பதும் உண்டு. ஆனால் இதுவரை விமான போக்குவரத்துத் துறை அது எதிர்நோக்கும் சவால் களைச் சிறப்பான முறையில் கையாண்டு வந்துள்ளது என்றும் திரு கோ கூறினார்.

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்ட முதல் நாளான நேற்று அங்கு வருகை புரிந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் பயணிகளை ‘ஸ்கேன்’ செய்து சோதனை செய்யும் சாதனங்களைப் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon