சகாயத்துக்குக் கொலை மிரட்டல்

சென்னை: ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தனக்குக் கொலை மிரட்டல் வருவதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரையில் கிரானைட் முறை கேடு நடைபெற்று வருவதாக கடந்த 2013ம் ஆண்டு சமூக ஆர் வலர் ‘டிராபிக்’ ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம் 2014ல் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணையை நடத்த உத்தர விட்டது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான 40 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விசாரணை நடத்தி, முறைகேடு தொடர்பான முழு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

அதில், கிரா னைட் கற்களை வெட்டிக் கடத்தி யதில் ரூ.1.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறைகேட்டில் மத்திய, மாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள் ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டிருப்பது தவறானது என்று தெரிவிக்கப் பட்டது. இதற்கிடையே தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் பாதுகாப்புக் கோரி அவர் மனுத் தாக்கல் செய்துள் ளார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.