சுடச் சுடச் செய்திகள்

பள்ளிகளில் கட்டாய யோகா; மனு தள்ளுபடி

புதுடெல்லி: இந்தியா முழுவதும் பள்ளிகளில் யோகா பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனு நேற்று தள்ளுபடி செய் யப்பட்டது. நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு யோகா பயிற்சியைக் கட் டாயமாக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதி மன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான அஷ்வினி குமார் உபாத்யா, டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஜே சி சேத் ஆகி யோர் தாக்கல் செய்திருந்தனர்.

மாணவர்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பள்ளி களில் கட்டாய யோகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, “பள்ளிகளில் என்ன கற்றுத்தர வேண்டும் என்பதை நம்மால் கூற முடியாது. அது எங்களுடைய வேலையில்லை. நாம் எப்படி பள்ளிப் பாடத் திட்டத்தை வழி நடத்த முடியும்,” என வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி லோகுர் கருத்துத் தெரிவித்தார். இதை யடுத்து கோரிக்கை மனுவை நீதி பதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon