அமெரிக்க அமைச்சர் டில்லர்சன் தாய்லாந்து, மலேசியா வருகை

கோலாலம்பூர்: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த வட்டார பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், நேற்று தாய்லாந்து சென்றார். தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தாய்லாந்து சென்றிருப்பது இதுவே முதல் தடவை. தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் பல்வேறு அம்சங்கள் குறித்து திரு டில்லர்சன் பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கூறினார். தாய்லாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் மலேசியா செல்லும் திரு டில்லர்சன் மலேசியப் பிதமர் நஜிப் ரசாக்கை இரவு விருந்தின்போது சந்தித்துப் பேசுவார் என்றும் நாளை மலேசிய துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடியை சந்திப்பார் என்றும் தகவல்கள் கூறின. வடகொரிய விவகாரம் குறித்தும் அவர்கள் பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon