ஏவுகணை விதிமுறைகள்: அமெரிக்கா மறு ஆய்வு

வா‌ஷிங்டன்: வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டங்களால் பதற்றம் நிலவும் வேளையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை குறித்த விதிமுறைகளை தென்கொரியா வுடன் சேர்ந்து மறு ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின் கீழ், தென்கொரியா அதிகபட்ச மாக 800 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய ஏவு கணைகளைத் தயாரிக்க முடியும். வடகொரியா அதன் அணு வாயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அந்நாட்டை நெருக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் வடகொரியா அதன் சோதனைகளைத் தீவிரப் படுத்தியுள்ளது.

வடகொரியா சென்ற மாதம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரு ஏவுகணை களை சோதனை செய்தது. வட கொரியாவின் மிரட்டல் அதி கரித்து வரும் வேளையில் தென்கொரியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஜெஃப் டேவிஸ் கூறினார். இன்னும் வெகுதொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணை களை தென்கொரியா தயாரிப் பதற்கு அனுமதிக்கும் வகையில் ஏவுகணை விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தென்கொரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் அதுகுறித்து தற்காப்பு அமைச்சுடன் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon