சுடச் சுடச் செய்திகள்

ஓவியாவைக் குற்றம்சாட்டுகிறார் நமீதா

‘பிக்பாஸ்’ புகழ் ஓவியாவைத் தாம் காதலிப் பதாக வெளியான தகவலை திட்டவட்ட மாக மறுத்துள்ளார் சிம்பு. இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதாவோ ஓவியாவை வறுத்தெடுத்துள்ளார். இது குறித்து நமீதா வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. “தினமும் காலையில் புன்னகையுடன் கண்விழிக்கும்போது, இன்றைய தினம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றே நினைப்போம். ஆனால் அந்த எண்ணத்தையும் மன அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக ஒருவர் செயல்பட்டார். அவரைப் புறந்தள்ளிவிட்டு நடந்தால் மீண்டும் குறுக்கிட்டார். “போலியான ஒரு நிகழ்ச்சியை வைத்து ரசிகர்கள் என்னை எடைபோட்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியின் இயக்குநர்கள் ஏமாற்றுவதில் திறமைசாலிகள். நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பது தெரியும். ஆனால் பாதி உண்மை மட்டுமே வெளிப்படுகிறது. நீங்கள் பார்த்தது தவறான பாதியாக இருக்கக்கூடும்,” என நமீதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon