சூர்யாவுக்கு ஜோடியானார் ரகுல்

தற்போதுள்ள இளம் நாயகிகளில் ரகுல் பிரீத்சிங் காட்டில்தான் வாய்ப்புகள் அடைமழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது. கார்த்தியைத் தொடர்ந்து அவரது அண்ணன் சூர்யாவுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் ரகுல். தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குத்தான் ரகுல் ஒப்பந்தமாகி உள்ளார். செல்வராகவன் இப்போது ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்குகிறார். அப்பணி முடிந்ததும் சூர்யாவின் படத்தைத் துவங்க உள்ளார். தற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கும் ரகுல், அடுத்து சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. “நான் சூர்யாவின் தீவிர ரசிகை. அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என விரும்பினேன். அது இப்போது நிறைவேறப்போகிறது. இந்தப் படம் என் திரை வாழ்க்கையில் முக்கிய மைல் கல்லாக அமையும்,” என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் ரகுல்.

Loading...
Load next