கென்யாவிற்கு தங்கம்

லண்டன்: உலகத் தடகள போட்டி யில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார். அவர் பந்தயத் தூரத்தை 4 நிமிடம் 02.59 வினாடிகளில் கடந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜென்னி சிம்சன் 4 நிமிடம் 02.76 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும் தென்னாப் பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா 4 நிமிடம் 02.90 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி பந்தய தூரத்தை 10.85 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். ஐவரிகோஸ்ட் வீராங் கனை மேரி ஜோசி தா லு வெள் ளியும் நெதர்லாந்து வீராங்கனை வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

Loading...
Load next