‘வேகப்பந்துவீச்சுதான் இந்தியாவின் பலம்’

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்துவீச்சில் முன் னேற்றம் கண்டுள்ளது என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கா. “கபில்தேவ், ஜவகல் ஸ்ரீநாத் திற்குப் பிறகு நீண்ட நாட்களாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. “தற்போது இந்திய அணி நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டுவிட்டது. இப் போது இந்திய அணி பலம் வேகப்பந்துவீச்சுதான். “உமேஷ் யாதவ், முகமது ஷமி, புவனேஷ் குமார் ஆகியோரால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து உள்ளது.

“இலங்கை அணியிலும் அதே பிரச்சினை தான். நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர் களை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை. “கடைசியாக நடந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் தேர்தல் எனக்குப் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. “இதில் தேவையில்லாத ஆட் கள் எல்லாம் நுழையப் பார்க்கிறார் கள். இது குறித்து நான் பலமுறை பேசியும் அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “நான் இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் குறைசொல்ல வில்லை. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தான் தவறு செய்கிறது. “இப்படியே சென்றால் இலங்கை கிரிக்கெட் பேரழிவை நோக்கித் தான் செல்லும். அடுத்த தலை முறை கிரிக்கெட் விளையாட்டாளர் களை நினைத்தால் எனக்குக் கவலையாக உள்ளது.