விவசாயிகளை வஞ்சிக்கும் அரசுகள்: திருமா புகார்

தஞ்சை: மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடினார். கதிராமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தில் விவசாயத்தை யும் விவசாயிகளையும் ஒட்டுமொத்தமாக அழிக்க நினைப்பதாகவும் புகார் எழுப்பினார். இதையெல்லாம் தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு எதிர்ப்பைத் தெரிவிப்பது போன்று செயல்பட்டு, மத்திய அரசின் திட்டங்க ளுக்கு ஜால்ரா போட்டு வருவதாக விமர்சித்தார். “தமிழகத்தில் சில பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்,” என்றார் திருமாவளவன்.

Loading...
Load next