வருங்கால சிங்கப்பூருக்கு மூன்று அம்சங்கள்

பயங்கரவாதம், வர்த்தகத் தடை போன்ற உடனடி பிரச்சினைகளை சமாளித்து வந்தபோதிலும் எதிர் காலத்துக்குத் தயாராகும் அம்சங் களிலும் சிங்கப்பூர் கவனம் செலுத்திவருவதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். நீண்ட காலத்துக்குப் பலனளிக்கக்கூடிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த பிரதமர் தமது தேசிய தினச் செய்தியில் அழைப்பு விடுத் துள்ளார். பாலர்பள்ளிக் கல்வியை மேம் படுத்துதல், நீரிழிவைத் தடுத்தல், அறிவார்ந்த தேசத்திற்கான தொழில்நுட்பத்தைத் தழுவுதல் ஆகியன அந்த மூன்று அம்சங் கள் என்று அவர் பட்டியலிட்டார்.

நாட்டைத் தோற்றுவித்த தலை வர்கள் பாடுபட்டதைப்போல வருங் காலத் தலைமுறையும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கில் பிரதமர் லீ இந்த ஆண்டுக்கான தேசிய தினச் செய்தியை கரையோரப் பூந் தோட்டத்தின் (பே ஈஸ்ட்) கிழக்குப் பகுதியிலிருந்து வெளியிட்டார். நாடு சுதந்திரம் அடைவதற்கு 52 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கரையோரப் பூந்தோட்டம் கடற்பகுதியாக இருந்ததை திரு லீ நினைவுகூர்ந்தார்.

“நவீன சிங்கப்பூரைத் தோற்று வித்த தலைவர்கள் துடிப்பான ஒரு நகரத்தைக் கற்பனை செய்த தோடு அதனை நிலமீட்புகள் மூல மும் புதிய நிதி வட்டாரத்தை உரு வாக்கியதன் மூலமும் நிறை வேற்றிக் காட்டினார்கள். “சிங்கப்பூர் ஆயுதப் படையை உருவாக்குவது, கவரக்கூடிய முத லீடுகளை ஏற்படுத்துவது, வேலை களை உருவாக்குவது, மக்க ளுக்கு வீடுகளைக் கட்டித்தரு வது, இளையர்களுக்குக் கல்வி போதிப்பது என்று ஆரம்ப கால கட்டத்தில் சிங்கப்பூர் சிரமங் களைச் சமாளிக்க வேண்டி இருந்தது.

“இருப்பினும் நமது தலைவர் களும் மக்களும் உடனடிப் பிரச் சினைகளுக்கு அப்பால் எதிர் காலத்துக்குத் தயாராவதன் அவ சியத்தைப் புரிந்து வைத்திருந் தார்கள். அந்த தொலைநோக்கு சிந்தனையின் பலனை நாம் இப் போது அனுபவித்து வருகிறோம். “தற்போது நிச்சயமற்ற உல கில், உள்ளேயும் வெளியேயும் உள்ள உடனடி பிரச்சினைகளை சிங்கப்பூர் சமாளித்து வருகிறது,” என்றார் பிரதமர்.

கரையோரப் பூந்தோட்டத்தின் ‘பே ஈஸ்ட்’ தோட்டத்திலிருந்து இவ்வாண்டின் தேசிய தின உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து  குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். கோப்புப்படம்

13 Nov 2019

அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் 2025க்குள் தானியக்க குடிநுழைவுச் சோதனை

போலிஸ் அலுவலக வளாகத்துக்குள் காலை 8.40 மணியளவில் நடந்து சென்ற ஓர் ஆடவர், அலுவலகம் ஒன்றின் முன்பாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது. படம்: இபிஏ

13 Nov 2019

போலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்