சுடச் சுடச் செய்திகள்

பிரான்ஸ்: ராணுவ வீரர்கள் மீது கார் மோதல்

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது கார் மோதி யதில் அறுவர் காயமடைந்ததாக வும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலிஸ் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி வடமேற்குப் புறநகர்ப் பகுதியான லெவலுவா பெரேயில் நேற்றுக் காலை 8 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்து ஒன்றில் அந்த பிஎம்டபிள்யூ கார் நிறுத்தப்பட்டு இருந்தது என்றும் படை வீரர்கள் குழு புறப்பட்டதும் கார் ஓட்டுநர் அதனை விரைந்து இயக்கி அவர்கள் மீது மோதச் செய்தார் என்றும் லெவலுவா பெரே நகர மேயரான பேட்ரிக் பல்கெனி சொன்னார். அருவருக்கத்தக்க, மூர்க்கத் தனமான செயல் இது என்று குறிப்பிட்ட திரு பல்கெனி, “இது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட செயல் என்பதில் சந்தேகமில்லை. எல்லாம் கண நேரத்தில் முடிந்து விட்டது.

“அதிவேகத்துடன் வந்த அந்த கார் ராணுவ வீரர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது,” என்று விவரித்தார். காயமடைந்த வீரர்கள் அனை வரும் உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். இதனிடையே, காரை மோதச் செய்த சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர். காரில் சென்ற அவரை விரட்டிச் சென்றபோது போலிசார் பலமுறை சுட்டதாகவும் அதில் அந்த நபர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon