ஓங்கி ஒலித்த ‘ஒரே தேச’ உணர்வு

பொன்விழா கொண்டாட்டத்திற்கு அழகு சேர்த்த மரினா பே மிதக்கும் மேடை, இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கி யது. தீவெங்குமிருந்து திரண்ட ஆயிரக் கணக்கான மக்கள், ஒரே தேசமாக ஒன்று சேர்ந்து சிங்கப்பூரின் ஐம்பத்து இரண்டாவது பிறந்தநாளை மிதக்கும் மேடையில் நேற்று குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நீண்ட வரிசைகளில் இருந்த பாது காப்புச் சோதனைகளைக் கடந்து குடும் பத்துடன் அமர்வதற்கு பிற்பகல் சுமார் 3.30 மணி முதலே பொதுமக்கள் வெள்ளமெனth திரளத் தொடங்கினர்.

மக்களின் உற்சாகத்தை மேலும் கரைபுரளச் செய்தது ஈராண்டுகளுக்குப் பின் தேசிய தின அணிவகுப்பில் இடம் பெற்ற மின்னற்படை வீரர்களின் வான்குடை சாசகம். அதேபோல, ஈராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டாட்டத்தில் இணைந்த முப்படைகளின் வாகன சாகசங்களை வைத்த கண் வாங்காமல் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

வானைக் கிழித்துக்கொண்டு சென்ற சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் எஃப் 15 ரக விமானங்கள், ‘ஏஹெச்’ ரக ஹெலிகாப்டர்கள், ‘டெரெக்ஸ்’, ‘பெல் ரெக்ஸ்’ ஆகிய அதிநவீன ராணுவ கவச வாகனங்களுடன் சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையின் சாகசங்களும் அரங்கேறு வதற்கு மிதக்கும் மேடை வகை செய்தது. குறிப்பாக, ‘சின்னுக்’ ஹெலிகாப்டரில் இருந்து குதித்த வீரர்களும் அதிவேகத் தில் அலைகளைப் பிளந்து சென்ற ‘ஆர்ஹெச் ஐபி’ ரக படகுகளும் பார்வை யாளர்களின் கைபேசிகளில் காணொளி களாகப் பதிவாகின.

இவ்வாண்டு தேசிய தின அணிவகுப் பின் ‘ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர்’ மாஸ்டர் வாரண்ட் அதிகாரி எட்வின் லிம் வீ மெங், மரியாதை காவல் அணி களைத் தவிர்த்த மற்ற அணிகளை பிரதான மேடைக்கு வருமாறு கட்டளை யிட்டதுடன் முழுமைத் தற்காப்பின் ஐந்து அம்சங்களைப் பிரதிநிதிக்கும் வகையில் பல அணிகள் ஒன்று திரண்டு, அதனதன் இடத்தில் நின்றன. அதன்பின், திரு எட்வின் லிம், இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் தளபதி லெஃப்டினென்ட் கர்னல் லிம் வீ டீயிடம் சடங்குபூர்வ அணிவகுப்பை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார்.

பிறகு, அணிவகுப்பு தளபதி கட்டளை பிறப்பிக்க, சிங்கப்பூர் ராணுவத்தைப் பிரதிநிதிக்கும் முதலாவது மின்னற்படை பட்டாளம், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, சிங்கப்பூர் குடியரசு கடற்படை, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகிய நான்கு படைகளைக் கொண்ட மரியாதை காவல் அணியினர் தங்கள் சடங்குபூர்வ சீருடை அணிந்து பிரதான மேடைக்கு மிடுக்காக அணிவகுத்து வந்தனர்.

ஆறு அங்கங்களாக நடந்தேறிய தேசிய தின அணிவகுப்பின் இடையிடையே வானில் பாய்ச்சப்பட்ட ஒளிக்கற்றைகளும் இறுதியில் இடம்பெற்ற வாணவேடிக்கையும் அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும்படியாக இருந்தன. படம்: சாவ்பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon