கொண்டாட்டம், குதூகலம், கும்மாளம்

மரினா பே மிதக்கும் மேடையில் அரங்கேறிய இவ்வாண்டின் தேசிய நாள் அணிவகுப்பைக் காண சிவப்பு, வெள்ளை நிறங் களில் ஆடையணிந்த மக்கள் நேற்று மதியம் 3.30 மணிக்குள் அரங்கத்தை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். வரிசை நீளமாவதற்குள் உள்ளே நுழையவும் பொழுது சாய்வதற்குள் அருமையான புகைப்படங்கள் எடுக்கவும் விரும்பிய பலரும் முன்கூட்டியே ஆர்வத்துடன் கூடினர்.

இவ்வாண்டு பாதுகாப்பு ஏற் பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருந்த தால், மிதக்கும் மேடைக்கு வெளியே மக்கள் வரிசைப் பிடித்து சீராகக் காத்திருந்தனர். ஹீலிக்ஸ் பாலம், தெமாசெக் அவென்யூ, மரினா ஸ்குவேர், எஸ்ப்ளனேட் டிரைவ்வே ஆகிய இடங்களில் நுழைவழிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்காலிக அரங்கமாக அமைக்கப்பட்ட மிதக்கும் மேடை, சிங்கப்பூரர்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டது. பார்வையாளர்களுக்குக் கரை யோரப் பகுதிகளின் கண்கவர் காட்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, ராணுவத்தின் தரை, ஆகாயம், கடல் சாகசக் காட்சிகளைப் படைப்பதற்கான ஒரே இடமாகவும் மிதக்கும் மேடை திகழ்கிறது.

வர்த்தகக் கட்டடங்கள் நிறைந்த சிங்கப்பூரின் அழகிய நீர்முகப்பைத் தாண்டி வானில் சினுக் ஹெலி காப்டர் ராட்சத தேசிய கொடியை ஏந்திவர இரண்டு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பின் தொடர்கின்றன