பலத்த பாதுகாப்பு, தணியாத உற்சாகம்

இவ்வாண்டின் தேசிய தின அணி வகுப்புக்காகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோ திலும் அணிவகுப்பைக் காண வந்தோரில் பலரும் உற்சாகம் சிறிதளவும் குன்றாமல் தேசிய நாளைக் கொண்டாடினர். சிலர் பிற்பகல் 2 மணிக்கே வரிசைபிடித்து நிற்கத் தொடங்கி விட்டனர். கடற்துறை செயற்பாட்டு நிர் வாகியான 29 வயது கய்ருல் அசர் ரொசாவி, மிதக்கும் மேடை யின் நுழைவாயில் பிற்பகல் 3 மணிக்குத் திறக்கப்படுவதற்கு முன்பே மரினா ஸ்குவேரை சென் றடைந்தார். அணிவகுப்பு மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

பாதுகாப்புச் சோதனைகள் பற்றி கேட்டபோது, “உலகெங்கிலும் தாக்குதல்கள் நடந்து வருவதால் சோதனைகள் அவசியம் என்றே நினைக்கிறேன். “நாங்கள் முன்கூட்டியே வந்த தால் சற்றே சிரமமாக இருக்கலாம். இப்போது கொளுத்தும் வெயிலில் நாங்கள் காத்திருக்க வேண்டும். “ஆனால் பின்னர் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் முன்பகுதியில் இடம் பிடிக்கவும் விரும்பினோம்,” என்று கூறினார். ஓய்வுபெற்ற 69 வயது எட்வின் கோவும் அவரது 70 வயது மனைவி தெரசா இங்கும் பிற்பகல் 2 மணியிலிருந்து வரிசைப்பிடித்து நின்று மூன்றாவது வரிசையில் இடம்பிடித்தனர்.

தேசிய தின கொண்டாட்டத்தில் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி ஒருவர் வீழ்த்தப்படுவதைப் போல பாவனை செய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்