சென்னையில் துப்பாக்கி விற்றவர்கள் கைது

சென்னை: சட்ட விரோதமாக துப்பாக்கி விற்றவர்களை சென்னை போலிசார் கைது செய்து உள்ளனர். சென்னை வாலாஜா சாலை யில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சில நபர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்வதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலிசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலிசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி விற்க முயன்ற வியாசர்பாடியைச் சேர்ந்த கோபிநாத், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த முருகன், மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலிசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து 9 எம்எம் பிஸ்டல் துப்பாக்கி, குண்டுகளு டன் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் போலிசார் மேற்கொண்ட சோதனையில் மகாராஷ்டிரா மாநில இளைஞரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த 2ஆம் தேதி காரில் திருப்பதி சென்ற மகாராஷ்டிரா மாநில பக்தரிடமிருந்தும் துப்பாக்கி, தோட்டாக்களை போலிசார் பறிமுதல் செய்தனர். பக்தர்கள் என்ற போர்வை யில் தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி உள்ளனரா என்று போலிசார் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.