கழுதை மூலம் பொருட்களைக் கொண்டுசெல்லத் தடை

மதுரை: சதுரகிரி மலைக்கு பொருட்களைக் கொண்டுசெல்ல கழுதைகளைப் பயன் படுத்த மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடு ருவலைத் தடுக்க கண்காணிப்பு கோபுரம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த முருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், “சதுரகிரி வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக விளங்கி வரு கிறது. இங்கு கண்காணிப்பு கோபுரக் கட்டுமானப் பணிக்கு வீட்டு விலங்கினமான கழு தையைப் பயன்படுத்தி பொருட் கள் கொண்டு செல்லப்படுகிறது. “கழுதையைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்து வதால் வன உயிரினங்களுக்குத் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழுதையைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருட் கள் கொண்டுசெல்லத் தடை விதிக்க வேண்டும்,” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கழுதை, எந்த வீட்டு உயிரினத்தையும் வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அனு மதிக்கக் கூடாது,” என இடைக் காலத் தடை விதித்தனர்.

Loading...
Load next