அதிகாரி சகாயத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆதரவு

சென்னை: அதிகாரி சகாயத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இப்போது வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். சகாயத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள அவர், கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவறிழைத்த நிறுவனங்கள், உடந் தையாக இருந்த அதிகாரிகள் என அனைவரிடமிருந்தும் தமிழக அரசு வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இன்று வரையிலும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என் பது மிகப்பெரிய வெட்கக்கேடு. “நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு ஆணையர் சகாயம் தன் உயிருக்கும் விசாரணைக்கு உத வியவர்களின் உயிருக்கும் பாது காப்பில்லை, ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்று சொல்வது தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அவக் கேடாகும்,” என்று கூறி இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon