நீர் சேகரிப்பு: தமிழக அரசை இடித்துரைத்த உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தமிழக அரசு நீர் சேகரிப்பில் போதுமான கவனம் செலுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் இடித்துரைத்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசா ரணையின் போது, மேட்டூர் அணை போன்ற பெரிய நீர்த்தேக்கங்கள் இருக்கும் பொழுது, அவற்றில் அதிக அளவில் நீர் தேக்கி வைக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என நீதிபதிகள் தமிழக அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக் கில் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மனுக்கள் தாக்கல் செய்துள் ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, நீர் சேகரிப்பில் தமிழகம் கவ னம் செலுத்தாதது ஏன் என்பது உட்பட தமிழக அரசுத் தரப்பிடம் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். நீர் சேகரித்து வைக்கப் பட்டால் கர்நாடகா அரசு நீர் தராவிட்டாலும் சேமித்து வைத்த நீரை ஆபத்துக் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள இயலும் என அறிவுறுத்திய நீதிபதிகள், நிலத்தடி நீர் சேகரிப்பு குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon