சுடச் சுடச் செய்திகள்

கள்ளநோட்டு: குஜராத் முதலிடம்

புதுடெல்லி: இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு அனைத்துலக எல்லைப் பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில் ஆக அதிகமாக ரூ.1.37 கோடி ($292,416) அளவுக்கு குஜராத்தில் கைப்பற்றப்பட்டதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் தேசிய குற்றப் பதிவுப் பிரிவால் சேகரிக்கப்பட்ட தகவல் இது என உள்துறை துணை அமைச்சர் ஹன்சர்ஜ் ஜி அஹிர் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 23,429 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.55 கோடி எனவும் கூறப்பட்டது. குஜராத்துக்கு அடுத்த படியாக மிசோரமில் ரூ.55 லட்சம், மேற்கு வங்கத்தில் ரூ.44 லட்சம், பஞ்சாபில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டில் கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பம், கூடுதல் மனிதவளம் ஆகியவற்றுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon