சுடச் சுடச் செய்திகள்

235 பிணைக் கைதிகள் விடுவிப்பு

மஸார்-ஷரிஃப்: ஆப்கானிஸ் தானின் தெற்கே ஒதுக்குப் புறமாக உள்ள கிராமத்திலிருந்து 235 பிணைக் கைதிகளை தலி பான் நேற்று விடுவித்தது. அதே கிராமத்தில்தான் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுடன் சேர்ந்து பொதுமக்களில் 50 பேரை அது படுகொலை செய்த தாகக் கூறப்படுகிறது. “உள்ளூரின் மூத்தோர்களும் மாவட்ட அதிகாரிகளும் மேற் கொண்ட சமாதானப் பேச்சின் விளைவாக இன்று மாலை பெண்கள், குழந்தைகள் உட்பட 235 பேர் விடுவிக்கப்படுகின்ற னர்,” என்று நேற்று மாவட்ட ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் சொன்னார். “இவர்கள் அனை வரும் பாதுகாப்பாக சர்-இ-புல் நகருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஆனால் இன்னமும் எண்ணிக்கை தெரியாத அளவுக்கு பிணைக்கைதிகள் சிக்கியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் மிர்ஸா வாலாங் பகுதியில் சுமார் 100 பேர் வரை பிணைக் கைதி களாகப் பிடித்து வைக்கப்பட்டுள் ளனர் என்று ஆப்கான் பாது காப்புப் படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக் கிழமை அரசாங்க ஆதரவு படைகளுடன் ஏற்பட்ட 48 மணி நேர மோதலில் தலிபானும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளும் சேர்ந்து 50 பேரை படுகொலை செய்துவிட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon