பிரதமர் நஜிப்: ரயில் திட்டத்தை அரசு உறுதியாக நிறைவேற்றும்

குவாந்தான்: சுமார் 55 பில் லியன் ரிங்கிட் மதிப்புள்ள (17.7 பில்லியன் வெள்ளி) ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டத்தின் நில அகழ்வு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நஜிப், “அனைத்து மலேசியர்களின் வாழ்க்கையில் இந்த ரயில் திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது,” என்றார். அதே சமயத்தில் இந்த ரயில் திட்டத்தைக் குறைகூறுபவர் களையும் அவர் சாடினார். சிலாங்கூரின் கொம்பாக் முதல் கிளந்தானின் பெங் காலான் குபுர் வரை 23 நிலை யங்களைக் கொண்ட ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டத்தை சிலர் கீழறுக்க முயற்சி செய் கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், அரசு உறுதியளித்தபடி திட்டத்தை நிறைவேற்றியே தீரும் என்று சூளுரைத்தார். இதற்கு முன்பு நிறைவேற்றப் பட்ட எம்ஆர்டி ரயில் திட்டமே இதற்கு சான்று,” என்றார் அவர். “மக்களின் ஆதரவுடன் அரசு உறுதியளித்தபடி 2024ல் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும். அதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்,” என்று அவர் சொன்னார்.

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்ட நில அகழ்வு நிகழ்ச்சியில் சீனாவின் வாங் யோங்குடன் கை குலுக்கும் பிரதமர் நஜிப். பிரதமர் அலுவலக அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், பாகாங் மாநில முதல்வர் அட்னான் யாக்கோப், கிளந்தான் மாநில முதல்வர் அஹமட் யாக்கோப் ஆகியோர் உடன் உள்ளனர். படம்: பெர்னாமா