அமெரிக்காவின் தீவை தாக்க பரிசீலனை - வடகொரியா அறிவிப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவு மீது ஏவுகணை பாய்ச்சுவதைக் குறித்துப் பரிசீலித்து வருவதாக வடகொரியா அதிரடியாக அறிவித் துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையான மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து வட கொரியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குவாம் மீது நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவு கணையை ஏவுவது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது என்று வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அதே குவாம் தீவில்தான் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.

அண்மையில் வடகொரி யாவுக்கு எதிரான பொருளியல் தடைகளுக்கு ஐநா அனுமதி வழங்கியிருந்தது. இதனை தங் களுடைய நாட்டின் இறையாண் மைக்கு எதிரானது என்று கூறிய வடகொரியா அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று தெரிவித்தது. புதன்கிழமை அன்று வடகொரி யாவின் அதிகாரபூர்வ செய்தி நிறு வனமான கேசிஎன்ஏ, குவாம் தீவு மீதும் அதனைச் சுற்றியும் ஏவு கணையைப் பாய்ச்சுவதற்கான செயல் திட்டத்தை அரசு கவன மாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தது. இதற்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஹுவாசோங்-12 என்ற நெடுந்தொலைவு ஏவு கணை பயன்படுத்தப்படும் என்று ராணுவ அறிக்கையைச் சுட்டிக் காட்டி அது கூறியது. குவாம் தீவில் அமெரிக்கா தற்போது ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

வடகொரியாவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக் கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே மக்களுக்கு வெளியிட்ட செய்தியில் குவாம் தீவின் ஆளுநர் எட்டி பாஸா கால் வோ "தற்போது மிரட்டல் ஏதும் இல்லை," என்றார். ஆனால் நேரக்கூடிய எந்த சம்பவத்துக்கும் தயாராக இருப் பதாகவும் அவர் சொன்னார். ஐந்து முறை அணுவாயுதங் களைப் பரிசோதித்துள்ள வட கொரியா, ஜூலையில் மட்டும் இரண்டு முறை கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்தது. அப்போது அமெ ரிக்காவைத் தாக்கக்கூடிய ஆற்ற லைப் பெற்றுவிட்டதாக வட கொரியா கொக்கரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!