சுடச் சுடச் செய்திகள்

‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஹன்சிகா விலகல்

பெரும் பொருட்செலவில் பிரம் மாண்டமாகத் தயாராக உள்ளது ‘சங்கமித்ரா’ திரைப்படம். இதில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரும் தற் போது பேச்சுவார்த்தையில் இருந்து விலகியுள்ளாராம். இதனால் நாயகி கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி நாயகிகளிடம் படக் குழுவினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஷ்ருதிஹாசன், திடீரென இதில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஒரு சோதனை முயற்சியாக ஓரிரு நாட்கள் படப் பிடிப்பு நடத்த உள்ளனர். அதற்கான அரங்குகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. “ஒருபுறம் பணிகள் நடைபெறும் போது தேவையற்ற வதந்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றில் எதுவுமே உண்மையில்லை” என்று ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon