மாதவன்: பிரச்சினைகள் முளைத்தன

நடப்பதெல்லாம் நன்மைக்கே எனக் கருதினால் நல்லதே விளையும் என்கிறார் மாதவன். ‘விக்ரம் வேதா’ வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருப்பவர், அப்படத்தை வெளியிடுவதில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாக அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதுவரை ரூ.50 கோடி வசூல் கண்டுள்ளதாம். “பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. ஏனென்றால் அப்போதுதான் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எல்லாம் நன்மைக்கே எனக் கருதினோம். படம் ஜூலை 21 அன்று வெளியாகி கடவுள் அருளால் வரலாறு படைத்தது. எனவே, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்,” என்கிறார் மாதவன்.

Loading...
Load next