தங்கம் வென்றார் தென்னாப்பிரிக்க வீரர்

லண்டன்: லண்டனில் நடந்து வரும் உலகத் திடல்தட வெற்றியாளர்கள் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் வேன் நீகெர்க் (படம்) தங்கப் பதக்கம் வென்றார். 2016 ஒலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற நீகெர்க் பந்தய தூரத்தை 43.98 வினாடிகளில் கடந்தார். பகாமஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும் கத்தாரைச் சேர்ந்த ஹாரூன் 44.48 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 800 மீ. ஓட்டப் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் பியா அம்ரோஸ் தங்கம் வென்றார். போலந்து வீரர் ஆடம் காஸ்கோட் வெள்ளியும் கென்யாவைச் சேர்ந்த கிபியான் பெட் வெண்கலமும் வென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next