சுடச் சுடச் செய்திகள்

மொரின்யோவின் கனவை சிதைத்த ரியால் மட்ரிட்

ஸ்கோப்பியா: ஸ்பானிய காற் பந்துக் குழுவான ரியால் மட் ரிட் நான்காவது முறையாக யூஃபா சூப்பர் கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்று அதிகாலை நடந்த இப்போட்டியில் சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியால் மட்ரிட் குழுவும் யூரோப்பா லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் சூப்பர் கிண்ணத்திற்காக மல்லுக்கட் டின. இதில் தொடக்கம் முதலே ரியால் மட்ரிட் குழு ஆதிக்கம் செலுத்தியது. 24வது நிமிடத்தில் கேஸ் மிரோ, மட்ரிட் குழுவிற்கான முதல் கோலைப் புகுத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் விழுந்த ஒரே கோல் இது. பிற்பாதி ஆட்டத்தின்போது, 52வது நிமிடத்தில் இஸ்கோ அடுத்த கோலைப் புகுத்த மட்ரிட் குழுவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், 62வது நிமிடத்தில் மேன்யூவின் புதிய விளையாட் டாளரான ரொமேலு லுக்காகு கோலடித்து, முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார். நம்பிக்கை தளர்ந்திருந்த மேன்யூவிற்கு லுக்காகுவின் கோல் ஊக்கமளிக்கும் வகை யில் அமைந்தாலும் அக்குழு வால் இன்னொரு கோலைப் புகுத்தி, ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனது.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவை வீழ்த்தி சூப்பர் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவினர். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon