கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய ஜடேஜா

துபாய்: இந்திய கிரிக்கெட் அணி ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் மற்றும் சகல துறை (ஆல்ரவுண்டர்) வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட் டது. ‘ஆல்ரவுண்டர்’ பட்டியலில் ஜடேஜா முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதன்முறை.

இலங்கைக்கு எதிரான இரண் டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அதிரடியாக ஆடி 70 ஓட்டங்களைச் சேர்த்ததுடன் ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய தால் ‘ஆல்ரவுண்டர்’ தரவரிசை யில் உச்சநிலையை எட்டினார். அத்துடன், பந்துவீச்சாளர் களுக்கான தரவரிசையிலும் 893 புள்ளிகளுடன் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் ஓர் இடம் கீழிறங்கி 3வது இடம் பிடித்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்துக்கு முன்னேறியுள் ளார். பந்தடிப்பாளர்களுக்கான தர வரிசையில் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதல் இடத்திலும் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 2வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.