ஆர்சனல்-லெஸ்டர் சிட்டி மோதல்

லண்டன்: கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளிக்குப் பின் காற்பந்து உலகம் மீண்டும் களைகட்டவிருக்கிறது. காற்பந்து ரசிகர்களின் மனங்கவர்ந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் புதிய பருவம் இன்றிரவு 2.45 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. முதல் ஆட்டத்தில் 2015-=16 பருவத்தின் வெற்றியாளரான லெஸ்டர் சிட்டியும் கடந்த 12 பருவங்களாகப் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வரும் ஆர் சனல் குழுவும் பொருதுகின்றன. நடப்பு வெற்றியாளரான செல்சி குழுவை வீழ்த்தி சமூகக் கிண் ணத்தை வென்ற உற்சாகத்துடன் இருக்கும் ஆர்சனல் குழு, இம் முறை பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படு கிறது. அந்த எண்ணத்தை வலு வாக்கும் விதமாக முதல் போட்டி யிலிருந்தே ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் உள்ளது அக்குழு.

இருப்பினும் முன்னணி ஆட்டக் காரரான அலெக்சிஸ் சான்செஸ் காயம் காரணமாக முதல் ஆட்டத் தில் பங்கேற்க முடியாமல் போய் இருப்பது ஆர்சனலுக்குப் பின்ன டைவுதான். அத்துடன், மெசுட் ஓஸில், ஆரோன் ராம்சி, பெர் மெட்டசாக்கர் ஆகியோரும் லெஸ் டருக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான். காயம் காரணமாக ஃபிரான் சிஸ் கொக்குலன் இரு வாரங் களுக்கு ஆட முடியாது என்ற நிலையில், காயத்தால் நீண்ட காலமாக அவதிப்படும் கேப்ரியல், சான்டி கஸே„ர்லா ஆகியோரும் முதல்நிலை அணிக்குத் திரும்ப இன்னும் நாளாகலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த பருவத்தில் எவர்ட்டன் குழுவுடன் மோதிய கடைசி ஆட் டத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் கொசியல்னியும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. அதே நேரத்தில், அக்குழுவின் புதிய வரவுகளான பிரெஞ்சு தாக் குதல் அலெக்சாண்ட்ரே ஆட்டக் காரர் லக்காஸெட்டும் போஸ் னியாவின் சேட் கொலாசினாச்சும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கு வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!