2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அனைத்துலக விமானத் துறை நிறுவனமான சிஏஇ உடன் இணைந்து தனது இரண்டாவது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கடினமான செயல்பாட்டுச் சூழலைச் சமாளிக்க பல புதிய தொழில்களில் எஸ்ஐஏ கால் பதித்து வருகிறது. அவற்றில் ஆக அண்மைய மேம்பாடு இது. எஸ்ஐஏ அதன் முதல் விமானி பயிற்சிப் பள்ளியை ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் 2016ஆம் ஆண்டு சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் தொடங்கி யது.

2019ஆம் ஆண்டில் முழுமை யாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன் 9,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அப்பள்ளி ‘ஏர்பஸ்’ஸின் ஆகப் பெரிய பயிற்சி நிலையமாகத் திகழும். இந்தப் புதிய பள்ளி, முதல் கட்டமாக போயிங் விமானங் களுக்குப் பயிற்சியளிக்கும். ஆசிய பசிபிக் வட்டாரத்தின் வருங்கால வளர்ச்சியைக் கருத் தில் கொண்டு விமானிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதாக எஸ்ஐஏ தெரி வித்தது. மாற்றங்களையும் புதிய தொழில்களிலும் கவனம் செலுத்தி வரும் எஸ்ஐஏ, தனக்கே உரிய உயர்தர விமான சேவையை மட்டும் நம்பி இல்லாமல் மலிவுக் கட்டண விமான சேவைகளிலும் முதலீடு செய்துள்ளது.