இழிவான சைகைக்கு மாணவர் மன்னிப்பு

ஹென்ரி பார்க் தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவர் சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பின்போது தன் நடுவிரலால் இழிவான சைகை காட்டியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்று அப்பள்ளியின் முதல்வர் சியா சூ கெங் தெரிவித்தார். மாணவருக்குப் பள்ளியும் பெற்றோரும் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தான் செய்த தவற்றை உணர்ந்து இச்செயலால் பாடம் கற்றிருப்பதாகவும் முதல்வர் கூறினார். அணிவகுப்பு முடிந்தபிறகு பங்கேற்பாளர்கள் மேடையில் கூடியிருந்தபோது கேமரா முன்னால் அந்த மாணவர் நடுவிரலைக் காட்டிய காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஹென்ரி பார்க் தொடக்கப் பள்ளியிலிருந்து சுமார் 400 மாணவர்கள் நேற்று முன்தினம் சிங்கப்பூரின் 52வது தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.