சுடச் சுடச் செய்திகள்

கத்தார் செல்ல இனி விசா தேவையில்லை

கத்தார் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள் இனி விசா எடுக்கத் தேவையில்லை. இந்தப் புதிய நடைமுறை உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது. தொடக்கத்தில் முப்பது நாட்களுக்குத் தரப்படும் நுழைவு அனுமதி, மேலும் முப்பது நாட்களுக்கு நீட்டிக்கப்படும். ஒருமுறை செல்பவர்களுக்கும் பலமுறை செல்பவர்களுக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும். விமானப் போக்குவரத்தையும் சுற்றுலாத் துறையையும் ஊக்குவிப்பதற்கு சிங்கப்பூர் உட்பட 80 நாடுகளுக்கு கத்தார் இந்தப் புதிய திட்டத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிக நாடுகளுக்கு விசா இல்லா நுழைவு அனுமதி அளித்துள்ள மத்திய கிழக்கு வட்டார நாடாக கத்தார் திகழும் என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை அதிகாரி ஹசன் அல்- =இப்ராஹிம் சென்ற புதன்கிழமை தலைநகர் தோஹாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

எண்ணெய் வளமிக்க நாடான கத்தார், 2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்த உள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் ஈரானுடன் அணுக்க தொடர்புவைத்திருப்ப தாகவும் கூறி மத்திய கிழக்கு வட்டாரத்தின் முக்கிய நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், எகிப்து, பஹ்ரேன் ஆகியவை இவ்வாண்டு ஜுன் 5ஆம் தேதி முதல் கத்தாருடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon