சுடச் சுடச் செய்திகள்

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற கடும் போட்டி

புதிய வரி விதிப்பால் திரைப்படத்துறை வெகுவாகப் பாதிக்கப்படும் என்று பலரும் கூவிக் கொண்டிருந்தனர். ஆனால் நடப்பவை எல்லாம் அதற்கு நேர்மாறாகவே உள்ளன. திரையரங்குகளில் கூட்டம் குறை யும் என்றனர். ஆனால் ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய இரு படங்களும் அந்தக் கவலையைப் பொய்யாக்கிவிட்டன. இந்நிலையில் மீண்டும் திரைப் படங்களின் தொலைக்காட்சி ஒளி பரப்பு உரிமைக்குக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அஜித், விஜய், சூர்யா ஆகிய மூவரும் தற்போது நடித்து வரும் படங்களின் தொலைக்காட்சி உரி மையை கடும் போட்டிக்கு இடையே தொலைக்காட்சி நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கின்றன. பெரிய படங்களின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றுவதற்கு இப்படி போட்டி நிலவுவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் கடந்த ஓரிரு ஆண்டு களாக படத் தயாரிப்புத் தரப்பு எதிர் பார்த்த தொகைக்கு இந்த உரிமை விலை போகவில்லை என்றும், தற் போது நிலைமை மாறியுள்ளது என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சன் தொலைக்காட்சி நிறுவனம் அதிவேகமாக பல்வேறு படங்களின் உரிமையைக் கைப்பற்றி வருகிறதாம். அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’, சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘சிங்கம் 3’ உள்ளிட்ட படங்களின் உரிமையை கடும் போட் டிக்கு இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ உரிமையை ஜி தமிழ் நிறுவனம் கைப் பற்றி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இவை போக, சிவகார்த்திகேயன் - பொன்.ராம் படம் மற்றும் சிவ கார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் ஆகிய படங்களின் உரிமையை தற் போதே சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon