சுடச் சுடச் செய்திகள்

காஜல் தொடுத்த வழக்கு தள்ளுபடி

தான் நடித்துள்ள தொலைக்காட்சி விளம்பரத்துக்கு தடை கோரி காஜல் அகர்வால் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல தனியார் நிறுவனம் தயாரித்த தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்திருந்தார் காஜல். இது கடந்த 2008ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது. அப்போது ஓராண்டுக்கு மட்டுமே அந்த விளம்பரப் படத்தை ஒளிபரப்ப வேண்டும் என்று இருதரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை மீறி எண்ணெய் நிறுவனம் ஓராண்டுக்கு பிறகும் விளம்பரத்தை வெளியிட, ஒட்டுமொத்தமாக அந்த விளம்பரத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காஜல்.

மேலும் ரூ.2.50 கோடி தனக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார். இந்த மனுவே தற்போது தள்ளுபடியாகியுள்ளது. “விளம்பரப் படத்தில் நடித்ததுடன் காஜல் அகர்வாலின் பங்கு முடிந்துவிட்டது. அவர் இதுபோல ஓராண்டுக்குத்தான் திரையிட வேண்டும் என்றெல்லாம் கோர முடியாது. எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்,” என நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon