ஹாலிவுட்டில் உருவாகும் சிம்பு படம்

பல்வேறு சர்ச்சைகள், தோல்விகளை சந்தித்தாலும் சிம்பு அசரமாட்டேன் என்கிறார். இதோ, அண்மைய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்வியைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான பணிகளில் தீவிரமாகிவிட்டார். சிம்புவே இயக்கப் போகும் இந்தப் படத்தை, ஹாலிவுட்டில் உருவாக்கி, அங்கேயே வெளியிடவும் போகிறாராம். “இது எந்த மாதிரியான படம் என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவல்களை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்,” என்கிறார்கள் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள். சிம்பு இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். யுவன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்வார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியானதையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமும் தொடங்கியுள்ளது. மிக விரைவில் சிம்பு தன் திருவாய் மலர்வார் என நம்பலாம்.

Loading...
Load next