சுடச் சுடச் செய்திகள்

வனவிலங்கு பாலத்தில் பொது மக்கள் உலாவுக்கு அனுமதியில்லை

தேசிய பூங்கா வாரியம், வன விலங்கு பாலம் ஒன்றில் ஏற்பாடு செய்த வழிகாட்டியுடன் கூடிய உலாவை முடித்துக்கொண்டு விட்டது. அந்தப் உலா மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்று வாரியத்தின் இணையத்தளத்தில் இடம் பெற்றிருக்கும் ஓர் அறிவிப்பு தெரிவித்துள்ளது. இந்த வனவிலங்கு பாலத்தில் உலா நிகழ்ச்சி மறுபடியும் தொடங்கினால் அது பற்றி அறி விக்கப்படும் என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது. வனவிலங்கு பாலம் புக்கிட் தீமா விரைவுச்சாலை நெடுகிலும் செல்கிறது. Eco-Link@BKE என்ற அந்தப் பாலம் சுற்றுப்புற வியல் பாலமாகும். அது புக்கிட் தீமா காட்டையும் மத்திய நீர்த்தேக்கக் காட்டுப் பகுதியையும் இணைக்கிறது. அந்த $16 மில்லியன் பாலம் 2013ல் திறக்கப்பட்டது. அந்த வழி யில் மனிதர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டு இருக்கிறது. மக்கள் அத்தகைய காட்டு உலா திட்டத்தில் அந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

The Eco- Link@BKE என்ற இந்தச் சுற்றுச்சூழல் பாலம் புக்கிட் தீமா விரைவுச்சாலை நெடுகிலும் $16 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது புக்கிட் தீமா காட்டையும் மத்திய காட்டு நீர்த்தேக்க வட்டாரத்தையும் இணைக்கிறது. படம்: சாவ்பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon