ஆடவருக்கு 18 மாத சிறைத்தண்டனை

முன்னாள் துப்புரவு மேற்பார்வை யாளர் ஒருவருக்கு திருட்டுக் குற்றச்சாட்டுகளின் பேரில் நேற்று இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சுந்நா சிங் சிராஜனாம், 46, என்ற அந்த மேற்பார்வையாளர் ஏமாற்றியது தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள், திருடியது, ஏமாற்றியது, காயம் விளைவித்தது ஆகியவை தொடர்பான தலா ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண் டார். இதர 11 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டன. குற்றச்செயல்கள் சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.