போர்விமான முப்பரிமாண காட்சி கவர்ந்தது

சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப் படை ‘F15SG’ போர் விமானத்தின் உட்பகுதியை முப்பரிமாணக் காணொளியாகப் பதிவு செய்து அதை நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது. அதில் “2017ஆம் ஆண்டின் தேசிய நாள் அணிவகுப்பில் நாட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நமது ‘F15SG’ போர் விமானம் பறந்து சென்றது! இதோ அதன் உட்பகுதி இப்படித் தான் இருக்கும். உல்லாசப் பயணத்திற்கு தயாராகுங்கள்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த காணொளி இதுநாள் வரை 55,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அத்துடன் 1,300 முறை பகிர்ந்துகொள்ளப்பட்டது. மரினா பே மிதக்கும் மேடையில் 25,000 பார்வையாளர்கள் ஐந்து ‘F15SG’ போர் விமானங்கள் பறந்த அற்புதக்காட்சியைக் கண்டுகளித்தனர்.