மகாதீரின் 3 மகன்களின் நிறுவனங்களில் சோதனை

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மூன்று மகன்கள் நடத்தும் நிறு வனங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அதோடு அந்த நிறுவனங்களி லிருந்து சில கோப்புகளையும் அதிகாரிகள் கொண்டு சென்ற தாக இணையத் தள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனைக்கு உள்ளான நிறு வனங்களைச் சேர்ந்த அதிகாரி கள் இதனை உறுதிப்படுத்தியுள்ள தாக ‘மலேசியகினி’ ஊடகம் தெரிவித்தது.

இதர சில ஊடகங்களும் அதிரடி சோதனை பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை சோதனையிடப்பட்ட நிறுவனங் களில் ‘கென்கானா கேப்பிட்டல்’ என்பதும் ஒன்று. இந்நிறுவனம், பெரும் செல்வந்தரான மொக்ஸானி மகா தீருக்குச் சொந்தமானது. மற்றொரு நிறுவனமான ‘கிர சென்ட் கேப்பிட்டல்’ மிர்ஸான் மகாதீர் தலைமையில் இயங்கி வருகிறது. அரசியல்வாதியான 3வது மகன் முக்ரிஸ் மகாதீர் தோற்று வித்த ‘ஆப்காம் ஹோல்டிங்ஸ்’ என்ற நிறுவனமும் சோதனையி லிருந்து தப்பவில்லை. அங்கிருந்து சில கோப்பு களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மலேசியாவில் இன்னும் ஓராண்டில் பொதுத்தேர்தல் நடை பெறவிருக்கிறது.

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon