சுடச் சுடச் செய்திகள்

நீச்சல் குளத்தில் பாய்ந்த கார்; ஓட்டுநரைக் காணவில்லை

கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் காரை இறக்கிய ஓட்டுநரைக் காணவில்லை. சம்பவத்துக்குப் பிறகு அவர் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற செவ்வாய்க் கிழமை அன்று செம்பவாங் கிரசெண்டில் உள்ள அந்த வளாகத்தில் காலை 9.00 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று காவல்துறையினர் கூறினர். அதே நாள் காலை 10.22 மணிக்கு சம்பவம் குறித்துத் தகவல் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காரில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பதற்றத்துடன் பலமுறை கைத்தொலைபேசியில் பேசியதைக் காண முடிந்ததாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் கூறினர். அந்தப் பெண் பயணி தம்மை அணுகியவர்களிடம் உதவி பெறுவதற்காக காரின் ஆண் ஓட்டுநர் சென்றுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அன்று இரவு வரை ஓட்டுநர் திரும்பவில்லை. இந்த நிலையில் போலிசார் இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். படம்: இணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon