பெண்களிடம் குறும்பு; டெல்லியில் ஓம் சுவாமி திடீர் கைது

புதுடெல்லியில் தம்மைத் தாமே கடவுளாக அறிவித்துக் கொண்ட பிரச்சினைக்குரிய சாமியார்களில் ஒருவரான ‘ஓம் சுவாமி’ நேற்று கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் அவர் கைது செய்யப் பட்டதாக காவல்துறை தெரிவித் தது. ஆனால் ‘ஓம் சுவாமி’ கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஜனவரியில் பிரபல ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பெண் ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக ஓம் சுவாமி அந்நிகழ்ச்சியிலிருந்து வெளி யேற்றப்பட்டார்.

புதுடெல்லியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சி ஒன்றிலும் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததற்காக டெல்லியில் உள்ள உள்ளூர் மக்கள் அவரைக் கடுமையாக சாடியிருந்தனர். பிப்ரவரி மாதத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் போட்டி யிட்ட ஓம் சுவாமியும் அவரது உதவியாளரும் ஆடையை அகற்றி மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப் பட்ட பெண் குற்றம்சாட்டியிருந்தார். இதன் தொடர்பான வழக்கு ‘ஐபி எஸ்டேட்’ காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஓம் சுவாமியும் அவரது உதவி யாளர் சந்தோஷ் ஆனந்தும் பிப்ர வரி 7ஆம் தேதி அன்று ஆடை களைக் கிழித்து மானபங்கப்படுத் தினர்,” என்று புகாரில் பாதிக்கப் பட்ட பெண் கூறியிருந்தார். இதன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓம் சுவாமி கைது. கோப்புப் படம்