இணையும் அதிமுக பிரிவுகள்

அதிமுக அணியின் இரு பிரிவுகளான முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிரிவு, தற் போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரிவு ஆகியவை மீண்டும் ஒரு தலைமையின்கீழ் இணைந்து ஒன்றுபட்ட அதி முகவாக வலம் வர உள்ளதாக இந்திய செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்னோடியாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி யும் தற்பொழுது பெங்களுர் சிறையில் இருப்பவருமான சசி கலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட டிடிவி தினகரனுக்கு கட்சி யில் எந்தப் பதவியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார்.

கட்சியில் குழப்பம் விளைவிப் பதாகக் கூறி, அவர் நியமிப்ப தாகக் கூறும் எவரையும் பொருட் படுத்த வேண்டாமென்று கட்சிப் பொறுப்பிலுள்ள 26 பேர், எடப்பாடி பழனிசாமி உட்பட, கையெழுத் திட்ட தீர்மானத்தை நேற்று கட்சி வெளியிட்டது. அதில் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தேர்தல் ஆணையத்தின் முன் சமர்பிக்கப் பட்ட மனுவில் நிராகரிக்கப்பட்டி ருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி. கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு