கோடீஸ்வரர் ஏழையானார்; மகனால் வீதிக்கு வந்தார்

மும்பை: மிகப்பெரும் கோடீஸ்வர ராக வாழ்ந்த ரேமண்ட்ஸ் நிறு வனத்தின் உரிமையாளரை அவ ரது மகன் வீட்டை விட்டு துரத்தி அடித்ததால் பண வசதியின்றி அவர் வறுமையில் வாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கியவர் ரேமண்ட்ஸ் நிறு வனத்தின் உரிமையாளர் விஜய் சிங்கானியா. முதுமை, ஓய்வை கருத்தில் கொண்டு தனது வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் கொடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் சிங் கானியா மும்பை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய் துள்ளார்.

அதில் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன்னை அனு மதிக்க மறுப்பதாகவும் அது மட்டுமின்றி மகன் கவுதம் தன் னைத் தாக்குவதால் குடி யிருப்பை தர உத்தரவிடுமாறும் கோரியுள்ளார். அத்துடன் சுமார் 1,000 கோடி மதிப்புள்ள பங்குகளைத் தனது மகனுக்கே கொடுத்துவிட்ட தாகவும் இதனால் தற்போது பணமின்றி இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி நேற்று வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.