நிலநடுக்கத்திற்குப் பின்னர் சீனாவில் 60,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கில் உள்ள மலைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 60,000 பேர் வெளியேற்றப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் மாநில அதிகாரிகள் கூறினர். சிச்சுவான் மாநிலத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக் கத்தில் சுமார் 250 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்று மருத்துவமனைத் தகவல்கள் கூறின. இதனால் உயிரிழப்பு எண் ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சிச்சுவான் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 3,000 பேர் காப்பாற்றப் பட்ட நிலையில் ஆயிரக்கணக் கான ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். அந்த மாநிலத்தை நில அதிர்வுகள் உலுக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குச் செல்ல அஞ்சி பூங்காக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர் களுக்குத் தேவையான உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.