சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் 290 பேர் கைது

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற விருப்பதை முன்னிட்டு மலேசி யாவில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மலேசிய அதிகாரிகள் புதன் கிழமை இரவு மேற்கொண்ட மிகப் பெரிய அளவிலான இரண் டாவது சோதனையின்போது வெளிநாட்டினர் 290 பேர் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். சிரியா, ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சிபாங் வட்டார போலிஸ் தலைமையகத்தில் தற்போது சோதனை செய்யப்பட்டு வரு வதாகவும் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் பயங்கர வாதச் செயல்களில் தொடர்பு உடையவர்கள் யாரும் இல்லை என்றும் போலிசார் கூறினர். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் போலிசார் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். முன்னதாக மலேசியப் போலிசார் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர் சிட்டி மையப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது வெளிநாட் டினர் 409 பேர் கைது செய்யப் பட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon