ஐஎஸ் சந்தேகப் பேர்வழி துருக்கியில் கைது

அங்காரா: துருக்கியில் உள்ள விமானத் தளத்தில் அமெரிக்க விமானத்தை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் தகர்க்க திட்டமிட்டிருந்த சந்தேக நபரை துருக்கிய அதிகாரிகள் கைது செய்தனர். அந்த சந்தேக நபர், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஐஎஸ் போராளிகளை தோற் கடிக்க போராடி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையில் துருக்கியும் இடம் பெற்றுள்ளது.