கார்களை வாங்க, விற்க டிபிஎஸ் வங்கியின் இணையச் சந்தை

டிபிஎஸ் வங்கி கார்களுக்கான இணையச் சந்தை ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூரில் ஒரு வங்கி இத்தகைய ஒரு சந்தையை இதுவரையில் தொடங்கியதில்லை. தங்களுடைய கார்களை விற்க அல்லது கார் வாங்க விரும்புகின்றவர்களுக்கு ஒரே இட வசதியை இந்த இணையச் சந்தை வசதி வழங்குகிறது. சிங்கப்பூரில் செயல்படும் வங்கிகள் தங்களுடைய பணத்தைக் குறிப்பிட்ட நிதி சாராத தொழில்களில் முதலீடு செய்யலாம் என்று அண்மையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் யோசனை ஒன்றை முன்வைத்தது. இதன் தொடர்பில் குறிப்பிட்ட விதிமுறைகளைத் தளர்த்தலாம் என்றும் அது கூறியிருந்தது.

இதனையடுத்து, டிபிஎஸ்சின் இணைய கார் சந்தை ஏற்பாடு இடம்பெறுகிறது. ‘டிபிஎஸ் கார் மார்க்கெட்பிளேஸ்’ என்ற இந்த இணையச் சந்தை ஏற்பாடு சிங்கப்பூரில் ஆகப் பெரிய நேரடி கார் சந்தையாகத் திகழும். அது ஏறக்குறைய 3,500 நேரடி கார் உரிமையாளர்கள் பட்டியலை வைத்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட பல சலுகைகளை வங்கி வழங்கவிருக்கிறது. எஸ்ஜி கார்மார்ட், கார்ரோ போன்ற பிரபலமான நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த ஏற்பாட்டில் டிபிஎஸ் இடம்பெற்று இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon