சுடச் சுடச் செய்திகள்

நேர்மைக்கு கிடைக்க இருக்கும் பரிசுகள்

சென்ற வாரம் வரையிலும் எங்கு திரும்பினாலும் ‘ஓவியா ஓவியா’தான். சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் முணுமுணுத்த ஒரே பெயர் ‘ஓவியா’. இப்படியும் ஒரு பெண்ணா என்று உலகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்களால் பாராட்டப்பட்டவர் ஓவியா. ஏன் இத்தனை பாராட்டு என்கிறீர்களா? தமிழ்நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஓவியாவின் நேர்மையைப் பார்த்து வியக்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். “நேர்மைன்னா அது ஓவியாதான்” என்று கமல் வாயினால் பாராட்டு பெற்றார் ஓவியா.

அவரைப் பற்றி ப்ரியா ஆனந்த் கூறுகையில், “நான் எங்கு சென்றாலும் ‘பிக் பாஸ்’ பார்க்கும் நேரத்திற்கு வீட்டிற்குச் சென்றுவிடுவேன். என்னுடைய விருப்பமான நடிகை ஓவியாதான். ஆனால் ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தது எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. ஓவியா மிகவும் நேர்மையான பொண்ணு. ஓவியாவைத் தனிப்பட்ட வகையில் தெரியாது. ஒருமுறைகூட சந்தித்தது இல்லை. ஆனால் இனி ஓவியாவை சந்தித்துப் பேச விரும்புகிறேன்,” என்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பல ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அவரைப் பாராட்டி வந்தனர். ஆனால் அவர் அந்த ‘பிக் பாஸ்’ பெரிய வீட்டுக்குள் பட்ட துன்பங்களைப் பார்த்ததும் “நீ வெளியே வந்துடும்மா. திரையுலகம் உன்னுடைய நேர்மையைப் பற்றித் தெரிந்து கொண்டுவிட்டது. தமிழ்த் திரையுலகம் உனக்காகக் காத்திருக்கிறது,” என்று உருக்கத்துடன் கருத்துப் பதிவுகளை பதிவிட்டிருந்தனர். இந்த ரசிகர்களைப்போலவே தமிழ்த் திரையுலகமே கொண்டாடும் ஒரு நட்சத்திரமாக மாறிவிட்டார் ஓவியா.

அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகியதும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியா நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஓவியாவுக்கு தமிழில் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon