வெளிநாட்டு சிறைகளில் 7,620 இந்தியர்கள்

புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப் பட்டுள்ளதாக வெளியுறவு இணையமைச் சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப் பினர்களின் வினாவுக்கு விடையளித்த அவர், உலகின் பல்வேறு நாடுகளில் 86 சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக வும் இவர்களில் 50 பேர் பெண்கள் என்றும் தெரிவித்தார்.

56 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளின் சிறைகளில் உள்ளனர். சவூதி அரேபிய சிறை களில் மட்டும் 2084 பேர் உள்ளனர். இவர்களில் மது விற்றதற்காகவும் மது அருந்தியதற்காகவும் சிறைபட்டவர்களே அதிகம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோதமாக ஆட்கடத் தல், விசா விதிமுறைகள் மீறல் ஆகிய குற்றங் களின் பேரில் 500க்கு மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் சிறைகளில் 546 பேர் உள்ளனர்.

Loading...
Load next