சுடச் சுடச் செய்திகள்

மின்சாரத்தை உணவாக சாப்பிடும் அபூர்வ மனிதர்

முசாபர் நகர்: ‘மனித விளக்கு’ என்று தன்னைத் தானே செல்ல மாக கூறிக்கொள்ளும் ஆடவர் ஒருவர் மின்சாரத்தில் இருந்து தனக்கு சக்தி கிடைப்பதாகவும் மின்சாரம் பாய்ந்து கொண் டிருக்கும் வயர் களைத் தொடு வதால் அது தன்னைப் பாதிப்பது இல்லை என்றும் கூறியுள்ளார். “மின்சாரத்தை அரை மணி நேரம் கையில் பிடித்துக்கொண் டிருந்தால் போதும். பசி எடுக் காது. வீட்டில் உணவு இல்லாத தருணங்களில் எனக்கு எப் பொழுது எல்லாம் பசிக்கிறதோ அப்போது எல்லாம் மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும் வயர் களைப் பிடித்து வாயில் வைத்துக் கொள்வேன். அரை மணி நேரத்தில் உணவு உண்ட திருப்தி எனக்கு ஏற்பட்டுவிடும். மின்சாரத்தை உணவுபோல் சாப்பிடுகிறேன்,” என்று நரேஷ்குமார் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார், 42. இவரை மின்சார மனிதன் என அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இவரது உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதும் மின்சாரத்தை பசிக்கு உணவாக அவர் எடுத் துக் கொள்வதும் அங்கு வசிக்கும் மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதில்லை. அத்துடன் பசி எடுத்தால் பல்புகளை எரியவிட்டு அதன் ஒயர்களைத் தனது வாயில் பயமில்லாமல் வைத்துக் கொள்கிறார்.

இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம். ஒருமுறை எதேச்சையாக மின்சார ஒயரைத் தொட்டுள்ளார், ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவில்லை. இதிலிருந்து தான் தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்பத் தொடங்கியுள்ளார். “தொலைக்காட்சி பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி என எல்லாவகையான மின்சாரப் பொருட்களையும் நான் வெறும் கையால் தொடுவேன். அவற்றால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்ததில்லை,” என்று கூறுகிறார் நரேஷ்குமார்.

மின்சக்தியால் எனக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராது. நான் அதை பயமின்றி தொடலாம், விளையாடலாம், சாப்பிடலாம். வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை வாயில் வைத்துக் கொண்டால் என் பசி அடங்கி விடும் எனக் கூறியுள்ளார் நரேஷ்குமார். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon